X Press Perl- எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிவதற்காக குழு ஒன்று வரைவு


 எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிவதற்காக தமது குழுவொன்று, கப்பலின் அமைவிடத்துக்கு சென்றுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், கப்பல் அமைவிடத்திலுள்ள கடல்நீர் மாதிரிகளை ஆய்வுக்காக பெற்றுக் கொள்ளும் பொருட்டு இக்குழுவினர் குறித்த இடத்துக்கு சென்றுள்ளதாக அவ்வதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

No comments: