சிறிதளவு நீரில் மூழ்கியுள்ள X-Press Peral மீட்பு குழுவினர் உள் நுளைவு !

கொழும்பு, துறைமுகத்திலிருந்து 9.5 கடல்மைல் தொலைவில் தீப்பற்றிய எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் பின்பகுதி சிறிதளவில் நீரில் மூழ்கியுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பில் கண்டறிவதற்காக கடற்படை சுழியோடிகள் குழுவொன்று குறித்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ள இடத்துக்கு அனுப்பப்பட்டது.

இக்குழுவினர், கப்பலை சூழவுள்ள நீரை சோதனையிட்டதன் பின்னர், சுழியோடல் செயற்பாடுகளை முன்னெடுத்ததாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை,  மீட்புப் பணிகளில் ஈடுபட்ட சிங்கப்பூர் மற்றும் நோர்வே மீட்புகுழு உறுப்பினர்கள் 4 பேர், தீக்கிரையான கப்பலுக்குள் இன்று பிற்பகல் முதல் தடவையாக பிரவேசித்தனர்.

அதன்போது, அவர்கள் கப்பலின் நிலைமையை சோதனையிட்டதுடன், மதிப்பிடல் நடடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

அத்துடன், கப்பலில் ஏற்பட்டிருந்த தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த, இந்திய உயர்ஸ்தானிகரகம், ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 2 ஒரு மைல்கல்லை எட்டியது என்றும் தெரிவித்துள்ளது.

No comments: