ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை அதிபராக ; டேவிட் அமிர்தலிங்கம் (SLPS-1) நியமனம்.


அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கமு/திகோ/ ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை அதிபராக அதிபர் டேவிட் அமிர்தலிங்கம்  (SLPS-1) . MA.(political Sc), M.Ed, Dip.in,Edu, (Distinction), Dip.in.Edu,Mgt (Merit) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் நடந்தநேர் முகப்பரீட்சை பெறுபேறின் அடிப்படையில்  03/06/2021 முதல் செயற்படும் வண்ணம் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவை ஆணைக்குழுவின் செயலாளரின் அனுமதியின் பிரகாரம் கல்வி அமைச்சின் செயலாளரால் நேற்றைய தினம் நேரடியாக அழைக்கப்பட்டு குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த மூன்று வருடங்களின் பின் அக்கரைப்பற்று கமு/திகோ/ ஸ்ரீ இராம கிருஷ்ணா  தேசிய கல்லூரிக்கு நிரந்தர  அதிபராக எமது மண்ணை சேர்ந்த திரு. J.R.டேவிட் அமிர்தலிங்கம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

J.R.டேவிட் அமிர்தலிங்கம் அவர்கள்......

பேராதனை பல்கலைக்கழகதின் கலைப்பட்டதாரியாகவும்(B.A)அரசறிவியலில் முதுகலைமாணி(M.A)பட்டத்தையும் யாழ்ப்பாணபல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணி(M.Ed)பட்டத்தையும் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டபின் கல்வி டிப்ளோமாவில் அதி சிறப்பு சித்தியும் பெற்றுள்ளார்.

இலங்கை அதிபர் சேவை வகுப்பு-1(SLPS-1) ஐ சேர்ந்த இவர் இதே பாடசாலையில் 1992இல் ஆசிரியராக நியமனம் பெற்று 2012 இல் போட்டி பரீட்சை மூலம் இலங்கை அதிபர் சேவை-2 (SLPS-2) இற்கு தெரிவு செய்யப்பட்டு இதே பாடசாலையில் பிரதி அதிபராகநியமிக்கப்பட்டு பின் 2013 இல் இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் நிரந்தர அதிபராக நியமிக்கப்பட்டார்.

2018 இல் இலங்கை அதிபர் சேவை வகுப்பு-1 இற்கு பதவி உயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பட்ட பின் கல்வி முகாமைத்துவத்தில் சிறப்பு சித்தியையும்பெற்ற இவர் இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் ஆவார்.


No comments: