யாழ் இந்துக்கல்லூரி சமூகத்தினரால் திருக்கோவில் பகுதியில் நிவாரணப் பணி

யதுர்ஷன் 

யாழ் இந்துக்கல்லூரி சமூகம் கொவிட்19 இடர்  உதவித்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள 108 பின்தங்கிய குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் இன்று வழங்கப்பட்டது

இதன் போது திருக்கோவில் பிரதேச சுகாதார அதிகாரி வைத்தியர் ப.மோகனகாந்தன் தலைமையில் குடும்பம் ஒன்றிற்கு  ரூபா 2500/- பெறுமதியான நிவாரணப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது .

இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன்,திருக்கோவில்,பிரதச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரநிருபசிங்கம் மேகனகாந்தன் மற்றும் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இவ் நிவாரணப்பொதிகளை வழங்கி வைத்தனர்.  

No comments: