திருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியான விசேட சோதனை நடவடிக்கை !

 ஜே.கே.யதுர்ஷன் 


இன்றைய இரண்டாவது நாளாகவும் அம்பாறை மாவட்ட செயலக ஆளுகைக்குட்பட்ட   திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில்   பிரதான வீதிகள் மற்றும் உள்ளூர் வீதிகளில் பயணத்தடையை மீறி  அனுமதிபத்திரம் இல்லாமல் வெளியில் செயற்பட்ட நபர்கள் மற்றும்  வாகனங்கள்  மீது  சேதனை  நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டது.

இதன் போது  எழுமாறான ரெப்பிட் அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

மேலும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய நபர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 

குறித்த நடவடிக்கையானது நேற்றையதினமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது 

 திருக்கோவில்,பிரதேச கொவிட்19 தடுப்பு செயலணியின் தலைவரும் பிரதேச செயலாளருமான  திரு. த.கஜேந்திரன்  திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் திருக்கோவில் பிரதேச சுகாதார அதிகாரி மற்றும்  இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் குழுவினரும் குறித்த சோதனை நடவடிக்கையில்  இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: