பயணக்கட்டுப்பாடு நடைமுறைகள் தீவிரம்


கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்குகம்பஹா, பாணந்துறை, நுகேகொடை, கல்கிஸ்ஸை மற்றும் வத்தளை ஆகிய இடங்களில் வைத்து  விசேட ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன.

காவல்துறை ஊடகப்பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.


இந்த ஸ்டிக்கர்கள் ஒருநாள் மாத்திரமே செல்லுபடியாகும். ஒரே வாகனம் பலமுறை சோதனைக்கு உள்ளாக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இன்று ஒட்டப்படும் ஸ்டிக்கர் இன்று மட்டும் செல்லுபடியாகும் என்பதோடு, நாளை வேறொரு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்

No comments: