திருக்கோவில் பகுதியில் தொடர்ச்சியாக கரையொதுங்கும் கடலாமைகள்


யதுர்ஷன்

இன்று திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள,கடல் பிராந்தியத்தில் கடந்த இன்றைய தினம் வரை   06 கடலாமைகள் மற்றும் டொல்பின் மீனும்  கரை ஒதுங்கியுள்ளது.

அம்பாறை திருக்கோவில் கடல் பிராந்தியத்தில் நேற்றும் இன்றும் கடல் ஆமைகள் உயிரிடனும் மற்றும் இறந்த  நிலையிலும்   இனங்காப்பட்டுள்ளது.

இன்றையதினம் (20) 04 கடலாமைகள் மீட்கப்பட்டுள்ளன

இனங்காணப்பட்ட  கடல் ஆமைகள் ஒரே இனத்தை சேர்ந்தவை எனவும் அதில் ஒன்று கால்கள் இழந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் காஞ்சிரங்குடா வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இன்று அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளனர்.  

மேலும் இறந்த நிலையில் மீட்க்கப்பட்ட 6 கடலாமை மற்றும் டொல்பினையும் அம்பாறைமாவட்ட  வனஜீவராசிகள் பொறுப்பதிகாரி காரியாலயத்தில் ஒப்படைக்கவுள்ளனர் என திருக்கோவில் பிரதேச காஞ்சிரங்குடா வனஜீவராசிகள் காரியாலயப் பொறுப்பதிகாரி திரு.பிரசாந்  தெரிவித்துள்ளார்

No comments: