திருக்கோவில் பிரதேச மக்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு (விசேட கட்டுப்பாடு அமுல்)


தற்போது நாடளாவிய ரீதியில் கொரோனா பரவல் தீவிரமடைந்து காணப்படும் நிலையில் மக்களது நடமாட்டங்கள் சுகதார மற்றும் நிர்வாகத் துறையினருக்கு திருப்தியளிக்கும் வண்ணம் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில்..... 

அம்பாறை மாவட்ட செயலகத்திற்குட்பட்டதிருக்கோவில் பிரதேச செயலாளர்  பகுதிகளில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தவும்  மக்களது நடமாட்டத்தினை குறைக்கவும் திருக்கோவில் கொரோனா ஒழிப்பு செயலணி நாளை முதல் விசேட செயற்றிட்டம் முன்னெடுக்க இன்று கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

1 இதனடிப்படையில், நாளைமுதல் மக்கள் கூடியிருக்கும் படியான வீதியோர வியாபாரங்களுக்குத் தடை மீறிச் செயற்பட்டால் நடவடிக்கை.

2 வைத்திய, அத்தியாவசிய தேவை தவிர்ந்து வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை.

3 பலசரக்கு ,  மொத்த விற்பனையாளர்பள் 7 பேருக்கு மாத்திரம் அனுமதி

4 மரக்கறி மொத்தவியாபாரிகள் 4 பேருக்கு  மாத்திரம் அனுமதி

5 மீன் மொத்த வியாபாரிகள் 4 பேருக்கு மாத்திரம் அனுமதி

6 மேற் குறித்த 15 பேர் மாத்திரமே பிரதேச செயலக எல்லையினை விட்டு வெளியேறி மொத்த வர்த்தக மையங்களில் பொருட்களை கொள்வனது செய்து மீண்டும் பிரதேச செயலக எல்லைக்குள் பிரவேசிக்க அனுமதி

7 இவர்களிடம் இருந்தே பிரதேச எல்லைக்குள் அனுமதிக்கப்பட்ட வியாபாரிகள் பொருட்களை கொள்வனவு செய்து தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட கிராம நிலாதாரி எல்லைக்குள் மாத்திரம் வியாபாரம் செய்யலாம்.

8 அனுமதியளிக்கப்பட்ட வியாபாரிகள் தங்களுக்கு வியாபாரம் மேற் கொள்ள அனுமதிக்கப்பட்ட கிராம நிலாதாரி எல்லைக்குள் மாத்திரம் வியாபார நடவடிக்கைகளை மேற் கொள்ள முடியும் மீறி ஏனைய பகுதிக்குள் நுளைந்தால் நடவடிக்கை 

9 உதாரணமாக விநாயகபுரம் பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தம்பிலுவில் பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட அனுமதி கிடையாது மீறினால் அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்

10 மொபைல் வர்த்தக நடவடிக்கை அமுல்

11. தேவையற்ற விதத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முற்றகத் தடை

மேலும் மக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய அத்தியாவசிய பொருட்களின் விலைக்கு கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் திருக்கோவில் பிரதேச செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலை பேசி  எண் 0760997674, 0760997690 No comments: