21 ம் திகதி நாடு திறக்கப்படுமா?


தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீக்கி நாட்டை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக நாடு திறக்கப்படுமா? 
என்பது தற்போதைய நிலைகளை ஆய்வுசெய்து ஜூன் மாதம் 19 அல்லது 20 ஆம் திகதியளவிலேயே தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் சந்திப்பில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.


No comments: