சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 14 பேர் கைது 8(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓமனியாமடு ஆற்றில் குழு ஒன்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் 14 பேரை இன்று புதன்கிழமை (04) கைது செய்ததுடன் 8 உழவு இயந்திரம். 6 கனரக ரக வாகனங்களை மீட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் தப்பி ஓடியுள்ளதாக வாழசை; பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலையில்; குறித்த ஆற்றில் ஒரு குழுவினர் உழவு இயந்திரம் மற்றும் கன்ரர் ரக வாகனங்களில் சென்று மண் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது பொலிசாரைகண்டு பலர் தப்பி ஓடியநிலையில் பொலிசார் 14 பேரை மடக்கி பிடித்து கைது செய்ததுடன் ஆற்று மண்கள் ஏற்றபட்ட நிலையில் 8 உழவு இயந்திரம் 6 கனரக வாகனங்களை கைப்பற்றினர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை பயணத்தடையை மீறி மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது

No comments: