திருக்கோவில் பிரதேசத்தில் ஒரே நாளில் 05 தொற்றாளர்கள் அடையாளம்


திருக்கோவில் பிரதேசத்தில் இன்றைய தினம் (20)  05 கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரநிருபசிங்கம் மோகனகாந்தன் தெரிவித்தார்.

இதுவரையிர் திருக்கோவில் பிரதேசத்தில் 47 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் மூன்றாம் அலையில் 28 தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்

இன்றையதினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் தம்பட்டடை மற்றும் திருக்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் நேற்றையதினம் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களாவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்  திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 11 தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக  திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பரநிருபசிங்கம் மோகனகாந்தன் தெரிவித்தார்.

No comments: