அகத்தியன் வெளியிட்ட செய்தி | நடவடிக்கை எடுத்த கோமாரி பிரதேச (RDS) இளைஞர்கள் -


அகத்தியன் செய்தி இணையத்தளத்தில் கடந்த 18ம் திகதி அன்று அம்பாறை கோமாரி பிரதேச வனப்பகுதி தொடர்பில் செய்தி ஒன்றை பிரசுரம் செய்திருந்தோம்

குறித்த செய்தியானது அழகிய கோமாரி வனப்பகுதியில் நெடுந்துாரப் பயணம் மேற் கொள்ளும் பயணிகளின் அசமந்தப் போக்கினால் வனச் சூழல் உக்காத பிளாஸ்ரிக் கழிவுகளால் மாசுபடுகின்றது என்ற கருப் பொருளில் அமைந்திருந்தது 

குறித்த செய்தி (கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்)

https://www.akattiyan.lk/2021/04/blog-post_915.html

மேற் குறித்த விடையம் தொடர்பில் நாம் கோமாரி பிரதேச  (RDS)  சங்கத்திடம் முறையிட்டிருந்தோம் .

குறித்த விடையம் தொடர்பில் கவனம் மேற் கெண்ட பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் (சுபோகரன்) மற்றும் கோமாரி பிரசே (RDS)  சங்க இளைஞர்கள் கடந்த வியாழக் கிழமை சுகாதார அறிவுறத்தல்களை பின்பற்றி குறித்த வனப்பகுதியினை துப்பரவு செய்தனர்.

இயற்கையினை பாதுகாக்கும் பொருட்டு குறித்த விடையம் தொடர்பில் உடன் கவனமெடுத்த கோமாரி பிரதேச  (RDS)  சங்கத் தலைவர் காந்தன் மற்றும் இச் செய்தி தொடர்பில் எங்களுடன்   தொடர்பினைப் பேணிய கோமாரி பிரதேச விஜயகுமார் ஆகியோருக்கு எங்களது நன்றிகள்.

மேலும் குறித்த இளைஞர்களால் கோமாரி பிரதேச வைத்தியசாலயில் பாரிய சிரமாதான நிகழ்வு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்


பின்
No comments: