கொரோனா மூன்றாம் அலை - மட்டக்களப்பு மாவட்ட நிலவரம்



மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 23 பேர் கொவிட-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்

மேலும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 8 பேரும்,வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 7 பேரும்,செங்கலடி,ஓட்டமாவடி,பிரிவைச் சேர்ந்த தலா இருவரும்,ஏறாவூர்,களவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த தலா ஒருவரும்,இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 1136 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 974 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.152 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் 144 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: