நாடு முடக்கல் நிலையை நோக்கி செல்கின்றது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்


கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவது தொடர்பான முடிவுகளை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் தாமதப்படுத்துவதன் காரணமாக நாடு முடக்கல் நிலையை நோக்கி செல்கின்றது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.
'
கடந்தவாரம் மிகவும் தீர்க்ககரமானது என தெரிவித்துள்ள அவர் பலவிடயங்களை உடனடியாக அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் ஆனால் அரசாங்கம் அதனை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

தாமதமாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் பயனற்றவை என அவர்தெரிவித்துள்ளார்.

நாடு முடக்கப்படுவதை நாங்களும் விரும்பவில்லை என தெரிவித்துள்ள அவர் வைரஸ் பரவுவது நாட்டின் பல பாகங்களை முடக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments: