பயணத்தடை அடுத்த மாதம் வரை நீடிப்பு


நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை ஜுன் 7 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் விசேட ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த காலப்பகுதிக்குள், அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 25, 31 மற்றும் ஜுன் 4 ஆகிய நாட்களில் இதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: