தெற்கு அதிவேக நெடுஞ்சாலையினுாடாக பயணிப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு


மத்தளவிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையினுாடாக கொழும்புக்கு செல்லும் வாகனங்கள் இன்று முதல் கஹாதுடுவ வெளியேறும் இடத்தில் வெளியேற வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொட்டாவ,அந்துருகிரிய,கொத்தலாவ மற்றும் கடுவலை வெளியேறும் இடங்களில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுக்கபாட்டு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே மத்தளவிலிருந்து  தெற்கு அதிவேக நெடுஞ்சாலையினுாடாக கட்டுநாயக்க நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் போக்குவரத்து கட்டணத்தை செலுத்திவிட்டு கஹாதுடுவ வெளியேறும் இடத்தில் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments: