உணவுப் பொருள் விநியோகத்தில் ஈடுபவர்களின் கவனத்திற்கு (அனுமதி ரத்து)


உணவுப் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபடும்போது, கிளை வீதிகளில் பயணிக்காத வாகனங்களின் அனுமதிப் பத்திரத்தை, இரத்துச் செய்ய நேரிடும் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன எச்சரித்துள்ளார்.

உணவுப் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபடும் வாகனங்கள், கிளை வீதிகளில் பயணிக்காது, பிரதான வீதிகளில் மாத்திரம் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களை ஓரிடத்தில் ஒன்று கூட்டுவதற்காக உணவுப் பொருட்கள் விநியோக சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அனைத்து கிளை வீதிகளிலும் பயணித்து, பொதுமக்கள், ஓரிடத்தில் ஒன்று கூடுவதை தவிர்ப்பதற்காகவே, அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் கூறினார்.

No comments: