பாடசாலைகள் தொடர்ந்து மூடப்படுகின்றதா? - கல்வி அமைச்சர்


கொரோனா பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனெவே ஒருவார காலம் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில்,சுகாதார நிலைமைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின் அடிப்படையில் அடுத்த வாரம் 3ம் திகதி முதல் 7ம்  திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலைகளை நடத்துவது உசிதமில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் எதிர்வரும் 10ம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக எதிர்வரும் 7ம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments: