அடுத்த நான்கு வாரங்கள் பொது மக்கள் பொறுப்புடன் செயற்படுங்கள் - சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே


நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களைச் சரியான முறையில் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கொவிட்-19 நோய் கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

சுகாதாரப் பிரிவு பொதுமக்களுக்காக செயற்படுகின்றது. எனவே மே மாதத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் சுகாதாரப் பிரிவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் செயற்பாட்டைப் பொறுத்துத் தான் ஒட்சிசனின் அளவு தீர்மானிக்கப்படும்.

எனவே இந்த நான்கு வாரங்கள் பொது மக்கள் பொறுப்புடன் செயற்படுமாறு சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments: