பொலிஸாரிடம் அனுமதி பெற தேவையில்லை - அஜித் ரோஹண


அவசரமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டியவர்களை மருத்துவமனைகளிற்கு கொண்டு செல்வதற்கு அனுமதிப்பமத்திரம் எதுவும் அவசியமில்லை என பொலிஸ்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அவசரமாக நோயாளிகளை மருத்துவமனைகளிற்கு கொண்டு செல்வதற்கு பொலிஸாரிடம் அனுமதிபெறவேண்டியதில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறியநோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான தேவை காணப்பட்டால் பொலிஸாரை தொடர்புகொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தனிநபர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியாது வேறு ஒரு வீட்டிற்கு செல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

No comments: