நிந்தவூரில் இரு வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகி முற்றாக சேதம்.



(எஸ்.அஷ்ரப்கான்)

சம்மாந்துறை பொலிஸ், நிந்தவூர் பிரதேச செயலக மற்றும், சபை எல்லைக்குட்பட்ட செயின் முஹம்மட் ஜெமீல் என்பவருக்கு சொந்தமான கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் அதன் அருகில் இருந்த மரத்தளபாட வேலைத்தளம் ஒன்றும் நேற்று (15) இரவு 7.50 மணியளவில் தீக்கிரையாகி முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.


கல்முனை மாநகர சபைக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய சில நிமிடங்களுள் விரைந்து வந்த கல்முனை மாநகர தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


இதன் போது களத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஷ்ரப் தாஹீர் தேவையான அனைத்து முன்னெடுப்புக்களையும் செய்தார்.


இதன்போது கருத்து தெரிவித்த வர்த்தகர் சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த வர்த்தக நிலையத்தை திறந்ததாகவும் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: