மட்டக்களப்பில் தீவிரமையும் கொரோனா வைரஸ் !

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் 41 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றினார் ஒருவர் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் எமது  செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

மேலும் உயிரிழந்த நபர் காத்தான்குடி பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும் மட்டக்களப்பு பிராந்தியத்தில் கொவிட் 19 மூன்றாம் அலையில் 891 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 14 மணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமான 1874 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 23 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்

கடந்த 7  நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 407  தொற்றாளர்கள் அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ளனர். 

No comments: