கசிப்பு விற்பனையை நிறுத்தாவிடில் போராட்டம் வெடிக்கும் டிக்வெல்ல மேல் பிரிவு தோட்ட மக்கள்!(சுசிதரன்)


கடந்த 25 ஆண்டுகளாக கசிப்பு உற்பத்தியிலும்,விற்பனையிலும் ஈடுப்படுவோருக்கு எதிராக மக்கள் எதிர்வரும் நாட்களில் போராட்டத்தில் ஈடுப்படபோவதாக தெரிவித்துள்ளனர்,உடனடியாக போதை பொருள் மற்றும் கசிப்பு விற்பனையை நிறுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

"குறித்த போதை பொருள் விற்பனை காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையை தொடர்ந்து கைவிட்டு வருகின்றனர் 

இந்த நிலைமை தொடர்ந்தும் தொடர்வதால் தொற்றாத நோயாளிகளின் எண்ணிக்கையும் எமது தோட்டத்தில் அதிகரித்துள்ளது இது சமூக பிரச்சனையாகவே மாறிவிட்டது இனியும் பொறுமை காக்க போவதில்லை"எனவும் தெரிவித்தனர்.

மேலும் கசிப்பு,மற்றும் கஞ்சா விற்பனையை நிறுத்த கோரி ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பிரதேச செயலுகத்திற்கும் கடிதம் அனுப்பபிவைக்கப்பட்டுள்ளது குறித்த கடிதத்தை கவனத்தில் கொண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். 

No comments: