அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் !அம்பாறை மாவட்டத்தின் தெய்யத்தகண்டி காவல்துறை அதிகார பிரிவின், தெய்யத்தகண்டி மற்றும் கதிராபுற கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

கொழும்பு, காலி, அம்பாறை, இரத்தினபுரி முதலான மாவட்டங்களின், 7 கிராம சேவகர் பிரிவுகள், உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின், பிலியந்தலை காவல்துறை அதிகார பிரிவின், நாம்பமுனுவ மற்றும் கொரக்காபிட்டி கிராம சேவகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை காவல்துறை அதிகார பிரிவின், கொடஹேன மற்றும் தல்கஸ்கொட கிராம சேவகர் பிரிவுகளும் தற்போது முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின், கலவானை காவல்துறை அதிகார பிரிவின், ஹப்புகொட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

No comments: