பஸ் மற்றும் ரயில் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்


பயணிகள் பற்றாக்குறை காரணமாக அனைத்து பஸ் மற்றும் ரயில்களும்  தமது சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம் மேற்கொண்டுள்ளன.

இது தொடர்பில் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவிக்கையில்,

பஸ் சேவையினை 25 சதவீதமாக மட்டுப்படுத்தவுள்ளதாகவும்,அவற்றுள் நீண்டதுார சேவைகளும் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த போக்குவரத்தை பயன்படுத்துவதால் பஸ் சேவைகள் குறைந்துள்ளதாகவும்,இருப்பினும் அலுவலக போக்குவரத்து சேவைகள் செயற்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக பஸ்கள் சேவைக்காக ஒதுக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

மாகாண டிப்போ தலைவர்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு தங்களது சேவையை தொடர அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இந்த வாரம் இறுதி வரை ரயில்கள் வழமைப்போல் இயக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் காமினி சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை கருத்திற்கொண்டு அடுத்த வாரத்தில் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: