நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 375 பேர் தொற்றாளர்களாக அடையாளம்


இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 1716 பேரில் 375 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 247 பேர் ,களுத்துறை மாவட்டத்தில் 158 பேர், காலி மாவட்டத்தில் 138 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 108 பேர், கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 84 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 82 பேர், மாத்தறை  மாவட்டத்தில் 70 பேர், மொனராகலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 56 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 33 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 24 பேர், பதுளை மாவட்டத்தில் 12 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 09 பேர், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 15 பேர்,பொலன்னறுவை மாவட்டத்தில் 19 பேர், மன்னார் மாவட்டத்தில் 09 பேர் , அம்பாறை மாவட்டத்தில் 05 பேர், கிளி நொச்சி மாவட்டத்தில் 07 பேர் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 17 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது

No comments: