பொகவந்தலாவையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று(எஸ்.சதீஸ்)

பொகவந்தலாவ பொதுசுகாதார காரியாலயத்திற்குட்டபட்ட பகுதியில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உருதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர் 26.05.2021. புதன்கிழமை இரவு வெளிவந்த பி.சீ.ஆர். அறிக்கையின் ஊடாக இந்த 28 பேருக்கும் தொற்று உருதி
செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

கடந்த 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் அறிக்கையின் ஊடாக
பொகவந்தலாவ, தெரேசியா,டின்சின், கேர்க்கஸ்வோல்ட் மத்தியபிரிவு, எல்பட,
போடைஸ், ஆகிய பகுதிகளில் இருந்து இந்த 28 தொற்றாளர்களும்
இனங்கானப்பட்டுள்ளதோடு இவர்கள் நோர்வுட் ஆடைத்தொழிற்சாலை மற்றும்
நோர்வுட் பிரதேசசபையேின் உறுப்பினர்களோடு தொடர்புகளை பேணிவந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேலை இனங்கானப்பட்ட தொற்றாளர்கள் 28 பேரும் கலவரையின்றி
தனிபடுத்தப்பட்ட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது
இதுவரையிலும் பொகவந்தலாவ பொது சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 300கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்கானபட்டுள்ளமை
குறிப்பிடதக்கது

No comments: