IPL 2021: ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதல்


இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

ஐபிஎல் போட்டியின் 4வது லீக் ஆட்டமானது மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில், சஞ்சூ சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது. இரு அணிகளுக்கும் இது முதல் போட்டி என்பதால் இந்த போட்டியை வெற்றியுடன் தொடங்க இரு அணி வீரர்களும் தீவிர முயற்சியில் ஈடுபடுவார்கள்.

ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாகவும் அவர்களை தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 3வது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. பஞ்சாப் அணியில், அணி கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது.

ராஜஸ்தான் அணியில் இடம்பெறும் உத்தேச வீரர்கள் விவரம்:-

பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ரியான் பராக், சிவம் துபே, கிரிஸ் மோரிஸ், ராகுல் திவாதியா, ஸ்ரேயாஸ் கோபால், கார்த்திக் தியாகி மற்றும் ஜெய்தேவ் உனட்கட்.

பஞ்சாப் அணியில் இடம்பெறும் உத்தேச வீரர்கள் விவரம்:-

கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் புரான், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், சர்பராஸ் கான், ஷாருக் கான், முகமது ஷமி, ஜெய் ரிச்சர்ட்சன், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷதீப் சிங்.

மும்பையின் வான்கடே மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும், ஆட்டத்தின் ஆரம்ப கட்டத்தில், வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது. இரவு பொழியும் பனியினை கருத்தில் கொண்டு, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச முடிவு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் சம பலத்தில் உள்ளன. இருப்பினும் பஞ்சாப் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. வான்கடே மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் அதிகப்படியான ரன்களை குவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

No comments: