அம்பாறை மாவட்ட சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றம் - தீவிரமாகும் கட்டுப்பாடுகள்


அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட  சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத்தில் வருடாவருடம் சித்ரா பௌர்ணமி பூசையானது வெகு விமர்சையாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இவ்வருடமும் பூசை நிகழ்வுகளானது வெகு விமர்சையாக ஏற்பாடு செய்திருந்த தருணத்தில் தற்போது கொரோனா தொற்றின் 3ஆம் அலையின் சீற்றம் காரணமாக பூசை நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்தும் முகமாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட சுகாதார பரிசோதகர்களும் பொலிஸாரும் இணைந்து மக்களை கட்டுப்படுத்தி வருவதுடன் மக்களுடைய எண்ணிக்கையானது வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் மக்களை  பூசை நிகழ்வுகளுக்கு மட்டுப்படுத்தியுள்ளதுடன் மக்கள் இங்கு தங்குவதற்கான அனைத்து வசதிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் சுகாதார பிரதேச வைத்திய அதிகாரி,சுகாதார பரிசோதகர்கள் தீவிரமாக மக்களை வழிநடத்துவதையும் எம்மால் காணக்கூடியதாக முடிகின்றது.

மக்களுடைய வரவை கட்டுப்படுத்தும் நோக்கில் பூசை நிகழ்வுகளுக்கு மக்களை அதிக நேரம் அனுமதிக்காமல் உடனடியாக மக்களை ஆலயத்தில் இருந்து வெளியேற்றுவதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.






No comments: