நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்


நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று இரவு 8.00 மணிமுதல் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி,கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனியாவ காவற்துறை பிரிவின் பொல்ஹேன,ஹீரெலுகெதர,கலுவக்கல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படவுள்ளன.

அத்துடன் மினுவாங்கொடை காவற்துறை அதிகார பிரிவிற்கு உட்பட்ட அஸ்வென்னவத்தை கிழக்கு கிராம சேவகர் பிரிவும் இன்று இரவு 8.00 மணியுடன் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் மீகாதென்ன காவல் நிலைய அதிகார பிரதேசத்தில் மிரிஸ்வத்தை மற்றும் பெலவத்தை வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும்,திருகோணமலை காவல் நிலைய பிரிவிலுள்ள பூம்புகார் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

No comments: