பாடசாலை மூடுவது தொடர்பில் - கல்வி அமைச்சு...!


நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலைமை குறித்து பாடசாலைகளை மூடுவதற்கு கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மூடுமாறு குறித்து கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் ஏதாவது அறிவிப்பு விடுத்தால் மாத்திரம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டிப்படி பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை வழமை போல் முன்னெடுக்கப்படும் ஏதாவது பாடசாலையில் கொரோனா தொற்று தொடர்பாக அபாய நிலை ஏற்பட்டால் பாடசாலைகளின் அதிபரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக அந்தந்த பாடசாலைகளின் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்ல தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: