நாட்டின் இன்றைய வானிலை


மேல்,சப்ரகமுவ மத்திய மாகாணங்களிலும் காலி,மாத்தறை மாவட்டங்களிலும்  சில இடங்களில் மாலை வேளையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பிற பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு,மல்வானை,கொஸ்கம,சீதாவக்க,மல்தெனிய ,ரொசெல்ல,தலவாக்கலை,சீதாஎலிய,பசறை,வரலந்த மற்றும் பலாடி களப்புவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: