இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா


இந்தியாவில் நேற்றைய தினம் ஒரேநாளில் புதிதாக 3 இலட்சத்து 19 ஆயிரத்து 435  கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 76 இலட்சத்து 25 ஆயிரத்து 735 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 45 இலட்சத்து 45 ஆயிரத்து 342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் 28 இலட்சத்து 82 ஆயிரத்து 513 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் 2 ஆயிரத்து 764 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: