நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய முழு விபரம்


நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 997 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 94 ஆயிரத்து 577 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்குள்ளான 7,152 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை,நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அவிசாவளை, கந்தான மற்றும் கல்பாத்த ஆகிய பகுதிகளிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

92 வயதுடைய ஆணொருவரும் 70 வயதுடைய பெண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 647ஆக அதிகரித்துள்ளது.

No comments: