பேருந்து பயணிகளுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு


சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காத பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆராய்வதற்காக நாடு பூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும்,பேருந்தினுள் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதை தவிர்க்குமாறும் தற்போதைய ஆபத்தான நிலைமைக்கு மத்தியில் பேருந்துகளில் தூர பிரதேசங்களுக்கு பயணிப்பது கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பயணிகள் இந்த விடயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: