சகோதரனால் பொல்லால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழப்பு


மினுவாங்கொடை - வட்டினபஹா  பிரதேசத்தில் நேற்று சகோதரனால் பொல்லால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

32 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது குறித்த நபர் 27 வயதான தனது சகோதரனால் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் சந்தேக நபர் அப்பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: