இன்று முதல் மேலதிக ரயில்கள் சேவையில்...
சித்திரை புத்தாண்டு காலத்தில் பயணிகளை கருத்திற்கொண்டு இன்று முதல் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இதன்படி இன்று முதல் 21 ரயில்கள் மேலதிகமாக சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார்
மேலும் இன்று முதல் 18ம் திகதி வரை கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையும் , அத்துடன் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இதேவேளை கல்கிஸ்ஸை ரயில் நிலையத்தில் இருந்து 11ம் திகதி வரை விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை 10 மற்றும் 18 ஆகிய திகதிகளில் விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன் களுத்துறையில் இருந்து வியாங்கொடை வரை நாளொன்றில் 7 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இதன்படி, பண்டிகைக்காலத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய ரயில் போக்குவரத்துகளை மேற்கொள்ளுமாறு ரயில்வேதிணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments: