ரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவைகளை மீள முன்னெடுக்கத் தீர்மானம்


ரத்து செய்யப்பட்டிருந்த தூர பிரதேசங்களுக்கான சில ரயில் சேவைகளை மீள முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கொரோனா அச்சம் நிலைமை காரணமாக ரயில் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிகை குறைவடைந்தமையினால் ரயில் வேவைகளை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கண்டி, பதுளை, யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களுக்கான 16 இரயில் சேவைகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட இருந்தது.

எனினும் பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக மீளவும் குறித்த ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments: