அடுத்த வார பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்படவுள்ளது


அடுத்த வாரம் பாராளுமன்ற அமர்வுகள் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவுள்ளது.

சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தை மே 4 ஆம் திகதி மு.ப 11 மணியில் இருந்து பி.ப 5.30 வரை நடத்த எதிர்க்கட்சிகள் கோரின.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தை மே 5 ஆம் திகதி மு.ப 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை விவாதிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மே 4 ஆம் திகதி 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரையான காலப்பகுதியில் ஏற்றுமதி அபிவிருத்தி சட்டமூலத்தின் கீழ் வரும் உத்தரவுகள், சுங்க கட்டளை சட்டத்தின் கீழ் வரும் 4 பிரிவுகள், வெட் வரி தொடர்பான சட்டமூலம் மற்றும் உள்நாட்டு வரி வருமானம் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் கட்சித் தலைவர்கள் இணங்கியுள்ளனர்.

அதேபோல் மு.ப 11 மணியில் இருந்து மதிய போசன இடைவேளையின்றி மாலை 5.30 வரை எதிர்க்கட்சி கோரியதற்கமைய நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

No comments: