நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்தை கடந்தது


நாட்டில் மேலும் 672 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 657 பேர் மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 15பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆயிரத்து 722 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தினம் 216 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அத்தோடு, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 93 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 4 ஆயிரத்து 204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 634 ஆக உயர்ந்துள்ளது.

No comments: