ஐபிஎல் 2021 - இன்று டெல்லி கேபிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதல்


நடப்பு ஐபிஎல் சீசனின் ஏழாவது லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 

இந்த சீசனின் முதல் போட்டியில் டெல்லி அணி சென்னையை வீழ்த்தி இருந்தது. அதேபோல ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது. பஞ்சாப் வெறும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றிருந்தது.

ஐபிஎல் அரங்கில் இந்த இரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் இரு அணிகளும் தலா 11 முறை வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய நிலையில் காயங்கள் இந்த இரு அணியின் வீரர்களுக்கும் சங்கடத்தை கொடுத்துள்ளன. ராஜஸ்தான் அணியில் ஸ்டோக்ஸ் காயம் பட்டுள்ளார். அதனால் அவர் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியில் இடம் பெற்றுள்ள நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. 

இந்த போட்டியில் இரு அணியின் கேப்டன்களான ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் பெரிய இன்னிங்ஸ் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணியில் ரபாடா விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஸ்டோக்ஸூக்கு மாற்றாக ராஜஸ்தான் அணி டேவிட் மில்லரை களம் இறக்கலாம். ஆடுகளத்தை பொறுத்தவரை பேட்டிங் செய்ய சாதகமாக உள்ளது என தெரிகிறது. அதனால் அதிகளவில் ரன்களை இரு அணிகளும் குவிக்கலாம்.

No comments: