ஹட்டன் பொஸ்கோ கல்லுாரியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா - 15 மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலில்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் பொஸ்கோ கல்லுாரியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

23ம் திகதி கற்றல் செயற்பாட்டில் குறித்த ஆசிரியர் ஈடுபட்டமையினால் குறித்த 15 மாணவர்கள் உட்பட ஆசிரியரோடு தொடர்பினை பேணிவந்த அனைவரும் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரவித்தனர்.

இதேவேளை தொற்றுக்குள்ளான ஆசிரியரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: