நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 127 பேர் தொற்றாளர்களாக அடையாளம்


நாட்டில்,நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 283 பேரில் 127 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 26 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 17பேர், குருணாகல் மாவட்டத்தில் 16 பேர், புத்தளம் மாவட்டத்தில் 10 பேர், களுத்துறை மாவட்டத்தில் 06 பேர் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 04 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, அம்பாறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தலா 03 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி, மன்னார், திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா 02 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 58 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற் கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: