நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்


நாட்டில் மேலும் 772 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் பேலியாகொடை கொத்தணியுடள் தொடர்பு கொண்டவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 69,348 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5,501 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 63,401 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: