வாகனங்களில் பக்கக் கண்ணாடிகளை திருடியவர் கைது
வாகனங்களில் பக்கக் கண்ணாடிகளை (Side-mirror) திருடி, கடத்தியவர்கள் தெமட்டகொடை பகுதியில் பொலிஸ் வீதித்தடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பின் பல பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து திருடப்பட்ட 16 கண்ணாடிகள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பஞ்சிகாவத்தை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் திருடிய பக்கக் கண்ணாடிகளை வாகன உதிரிப்பாக விற்பனையாளர்களுக்கு விநியோகித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
No comments: