கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவு


நாட்டில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 772 பேரில் 200க்கும் மேற்பட்டோர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 245 பேர் , கம்பஹா மாவட்டத்தில் 214 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 53 பேர், களுத்துறை மாவட்டத்தில் 49 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 41 பேர், கண்டி மாவட்டத்தில் 40 பேர், காலி மாவட்டத்தில் 18 பேர் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 14 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் 13 பேர், மன்னார் மாவட்டத்தில் 11 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 11 பேர், புத்தளம் மாவட்டத்தில் 10 பேர், மாத்தளை மாவட்டத்தில் 10 பேர், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 09 பேர், பதுளை மாவட்டத்தில் 09 பேர் மற்றும் வவுனியா மாவட்டத்தில் 08 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 06 பேர், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தலா 02 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு ,மொனராகலை மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: