உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி
களுத்துறை மாவட்டம் மத்துகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட போன்து பிட்டிய 727 கிராமசேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்,மாத்தளை மாவட்டத்தின் மீதெனிய கிராம சேவகர் பிரிவின் சில பகுதிகள் தனிமைப் படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி போசலேன் பகுதி, இசுறு மாவத்தை மற்றும் எக்சத் ஜனபதய ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
-
No comments: