நேற்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய தகவல்


நாட்டில் மேலும் 826 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 816 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கிய தொட ர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன்,வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 64,983 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 6,592 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58,075 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: