மக்கள் வெள்ளத்துடன் பொலிகண்டியை வந்தடைந்த நீதிக்கான பேரணி

சந்திரன் குமணன்


பொலிகண்டியை வந்தடைந்தது நீதிக்கான பேரணி அலைகடல் என திரண்டு மக்கள் வெள்ளத்தில் நிறைந்துது .

வாழ விடு வாழ விடு தமிழினத்தை ,அழிக்காதே அழிக்காதே  வாழ்விடங்களை அழிக்காதே என்ற வாசகங்கள் விண்ணதிர சிங்களத்தின் செவிப்பறை கிழிய ஐந்து நாள் பேரணி இன்று மாலை  மணியளவில் வந்தடைந்தது.

பொத்துவிலில் கடந்த 3 ம் திகதி கொட்டும்  மழையில் பல விஷேட அதிரடி படையினர்,பொலிஸாரின் பல்வேறுபட்ட தடைகளை உடைத்து , அரசியல் சமூக ஆர்வலர்களின் நீதிமன்ற தடையுத்தரவுகளை வழங்கப்பட்டு மக்கள் உணர்வெழுர்சி பாரிய போராட்டமாக வடகிழக்கு தாயகங்களில் உணர்வோடு அனைவரும்  தங்களை ஈடுபடுத்தினர்.

அம்பாறை பொத்துவில் ஆரம்பித்த நீதிக்கான பேரணி மட்டக்களப்பு,திருமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஊடாக யாழ் பொலிகண்டி இன்று 7 ம்  திகதி முற்றத்தை வந்தடைந்தது.

தமிழர்களுக்கு அநீதி இழைத்து சிங்களத்திற்கும் , தமிழர் தாயகத்தில்  முள்ளிவாய்க்கால் படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்,  உள்ளிட்ட தமிழருக்கு இந்த தேசத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்திய போராட்டம் உலகை சற்று  இலங்கை தீவை உற்று பார்க்க வைத்துள்ளது.







No comments: