நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம்


நாட்டில் மேலும் 774 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 764 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.

அதன்படி நாட்டில்கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 76,428 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 6,614 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 69,411 ஆக அதி கரித்துள்ளது.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதுது.

No comments: